மாரத்தானில் முதலிடம்.. தொடர்ச்சியாக பதக்கங்கள்! யார் இந்த சாதனை சிறுமி?
சென்னை தாம்பரத்தில் ஸ்காட் கிளப் சார்பில் நடைபெற்ற 3 கி.மீ மாரத்தானில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் ஆன்லின் லிரிண்டா.
கன்னியாகுமரி மாவட்டம் ஆலன்விளை என்ற கிராமத்தில் கிறிஸ்டோபர் - செல்வி தம்பதிக்கு பிறந்தவர் ஆன்லின் லிரிண்டா.
தற்போது 5ஆம் வகுப்பு படித்து வரும் ஆன்லின் லிரிண்டா, நீச்சல் மற்றும் மாரத்தான் போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார்.
2021 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஸ்டேட் அக்வாட்டிக் அசோசியேஷன் சார்பில் நடத்தப்பட்ட மெட்லி ரிலேயில் இரண்டாம் இடம் பெற்றார்.
இந்தாண்டு திருப்பூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.
கொங்கன்னாபுரத்தில் நடைபெற்ற முத்து மாரத்தான் போட்டியில் 3 கி.மீ பிரிவில் முதல் இடம் பெற்று அசத்தினார்.
தமிழ்நாடு ஸ்டேட் அக்வாட்டிக் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற ஃபரிஸ்டைல் ரிலேயில் இரண்டாம் இடம் பெற்று அசத்தினார்.
எஸ்.பி.எஸ்.சி. குழந்தைகள் மாரத்தான் போட்டியில் 2 கி.மீ பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். ஸ்டேட் லெவல் 3ஆம் ஒபன் மினி மாரத்தான் (800மீ) இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார்.
பிளே பிட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற 2 கி.மீ மாரத்தான் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். ஸ்போகோ ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய 600மீ நீச்சல் போட்டியில் முதல் இடம் பிடித்தார்.
ஸ்டேட் லெவல் சாம்பியன்ஷிப் தொடரில் 200மீ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இன்று தாம்பரத்தில் ஸகாட் கிளப் சார்பில் கொங்கன்னாபுரத்தில் 3.கிமீ மாரத்தான் போட்டியில் முதல் இடம் பெற்று அசத்தியுள்ளார்.
மீனவக்குடும்பத்தில் பிறந்து, பெற்றோரின் கஷ்டமான சூழலிலும் சாதிக்க துடிக்கும் ஆன்லின் லிரிண்டாவுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.