பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் செய்த சர்ச்சைக்குரிய செயல்! கமெராவில் சிக்கிய சம்பவம்
தாய்லாந்து பிரதமர் Prayuth Chan-ocha, பத்திரிகையாளர் சந்திப்பின் போது நிருபர்கள் மீது கிருமிநாசினி ஸ்பிரே அடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பங்காக்கில் நடந்த சந்திப்பிலே பிரதமர் Prayuth Chan-ocha இவ்வாறு செய்தார். சந்திப்பின் போது அமைச்சரவை மறுசீரமைப்பு எப்போது என்பது குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த Prayuth Chan-ocha, எனக்கு தெரியாது, நான் அதை இன்னும் பார்க்கவில்லை. இதுகுறித்து தகவல் தெரிந்த ஒரே நபர் பிரதமர் தான். இனி இதுகுறித்து கேட்க வேண்டாம் என கூறினார்.
பின் அங்கிருந்த நிருபர்கள் மீது கிருமிநாசினி ஸ்பிரேவை அடித்துச்சென்றார். ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரலான Prayuth Chan-ocha, 2014 இராணுவ ஆட்சி கவிழ்ப்பில் இருந்து தாய்லாந்து பிரதமராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thai prime minister Prayuth Chan-ocha sprayed hand sanitizer at journalists to avert answering questions on the latest cabinet pic.twitter.com/nZyMgcou58
— Reuters (@Reuters) March 9, 2021
அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபோன்று பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டுள்ளார்.
நிருபரின் தலையில் தட்டுவது, காதுகளை இழுப்பதும், அதுமட்டுமன்றி ஒருமுறை கேள்விகளுக்கு பதிலளிக்க அவரின் கட் அவுட்டை கொண்டு வந்தது என சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டுள்ளார்.