காரை நிறுத்திய பொலிஸ் அதிகாரியை துடி துடிக்க தலையில் சுட்டு படுகொலை செய்த கொடூரன்! சிக்கிய பதபதைக்க வைக்கும் காட்சி
வட அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் நபர், பொலிஸ் அதிகாரியை தலையில் சுட்டு படுகொலை செய்த பதபதைக்க வைக்கும் வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 4ம் திகதி நியூ மெக்ஸிகோவில் கிழக்கு நோக்கி உள்ள இன்டர்ஸ்டேட் 10 சாலையிலே இக்கொடூர சம்பவம் நடந்தது.
காவல்துறை வெளியிட்ட வீடியோவில், வெள்னை நிற Chevrolet காரை மடக்கிய பொலிஸ் வாகனத்தில் வந்த Darian Jarrott, ஓட்டுநரை காரை விட்டு வெளியே இறங்குமாறு சொல்கிறார்.
கையில் AR-15 ரக துப்பாக்கியுடன் காரிலிருந்து இறங்கிய நபர், எதிர்பாராத விதமாக Darian Jarrott-யை சுடுகிறார்.
தரையில் சுருண்ட விழுந்த Darian Jarrott அருகே சென்ற நபர் சரமாரியாக சுட்டு கொன்று, இறுதியாக Darian Jarrott தலையின் பின்புறத்தில் சுட்டு சம்பவயிடத்திலிருந்து தனது காரை எடுத்துச்சென்று தப்பியுள்ளான்.
சம்பவயிடத்திற்கு விரைந்த உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை முகவர் கொலை குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
Darian Jarrott சுட்டுக்கொன்றவன் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் Cueva என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
Cueva இருக்கும் இடத்தை நியூ மெக்ஸிகோ பொலிஸ் கண்டறிந்ததையடுத்து, Lionel Palomares மற்றும் Sonny Montes ஆகிய பொலிஸ் அதிகாரிகள் அவனை பின்தொடர்ந்துள்ளனர்.
தன்னை பொலிசார் பின்தொடர்ந்து வருவரை அறிந்த Cueva, அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான்.
பொலிசார் எதிர்தாக்குதல் நடத்தியதில் Cueva சுட்டுக் கொல்லப்பட்டான், இந்த மோதலில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.