பிரான்ஸ் முழுவதும் நிறுத்தப்படும் பாதுகாப்புப் படைகள்? வன்முறை வெடிக்கலாம் என அச்சம்
மொரோக்கோ அணிக்கு எதிராக பிரான்ஸ் மோதும் கால்பந்து போட்டியால் கலவரம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் காவல்துறையினர் தயாராகியுள்ளனர்.
வன்முறை வெடிக்கக்கூடும்
FIFA உலகக்கிண்ண காலியிறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோத உள்ளன.
இப்போட்டியால் வீதிகளில் வன்முறை வெடிக்கக்கூடும் என்று பாதுகாப்பு தலைவர்கள் அஞ்சுகிறார்கள்.
இதன் காரணமாக பிரெஞ்சு காவல்துறையினர் வன்முறையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.
ஏனெனில், இந்தப் போட்டியில் பொது அமைதியின்மைக்கான அதிக ஆபத்து இருப்பதாக ஒரு இரகசிய உளவுத்துறை அறிக்கை எச்சரிக்கிறது.
பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்படும்
அதாவது, மொரோக்கோ வெற்றி பெற்றால் கொண்டாட்டங்களைத் தூண்டும்போது, அவை காவலர்களுடன் மோதல்களாக மாறக்கூடும் என்று அதிகாரிகள் குறிப்பாக கவலைப்படுகிறார்கள்.
ஆகையால், இப்போட்டிக்காக பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்சில் நூறாயிரக்கணக்கான மொரோக்கோ நாட்டினர் அல்லது மொரோக்கோ வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சு குடிமக்கள் வசிக்கின்றனர்; கால்பந்து ரசிகர்கள் பொறுப்புடன் கொண்டாடுமாறு பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
பிரான்ஸிடம் இருந்து 1956யில் மொரோக்கோ நாடு சுதந்திரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |