பிரபல ஐரோப்பிய நாட்டில் கொரோனா 3வது அலை! அரசாங்கம் முக்கிய அறிவிப்பு
பிரபல ஐரோப்பிய நாடான போலந்தில் கொரோனா 3வது அலை தொடக்கத்தை எதிர்கொள்கிறது என அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பனிச்சறுக்கு, சினமா, ஹொட்டல் மற்றும் 50% இருக்கைகளுடன் திரையரங்குளை திறந்து சில கொரோனா கட்டுப்பாடுகளை போலந்து தளர்த்தியது.
ஆனால், தொற்றின் நிலைமையை பொறுத்து இந்த நடவடிக்கைகளை் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
போலந்து கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் உள்ளது, ஸ்லோவாக்கியா அல்லது செக் குடியரசைப் போல தீவிரமாக அல்ல.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாட்டில் தொற்றுகள் அதிகாரித்து வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம் என சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Wojciech Andrusiewicz கூறியுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக வாரம் வாரம் தொற்றுகள் 20% அதிகரித்து வருகிறது, தற்போது போலந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டதட்ட 10% பேர் பிரித்தானியா மாறுபாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.