பிரபல நாட்டின் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை தாக்கிய கொரோனா! எப்படி இருக்கிறார்கள்? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
மத்திய கிழக்கு நாடான சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா அல்-ஆசாத் இருவருக்கும் கொரோனா உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதிக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதியானதை ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா அல்-ஆசாத் இருவரும் சிறிய அறிகுறிகளைக் காட்டிய பிறகு பிசிஆர் சோதனை மேற்கொள்ளபட்டது.
பரிசோதனை முடிவில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
இருவரும் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனர், வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த பணிகளை தொடர்வார்கள் என ஜனாதிபதி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
சிரியாவில் கொரோனாவால் சுமார் 15,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 10,374 பேர் குணமடைந்துள்ளனர் மேலும் 1,063 பேர் பலியாகியுள்ளனர்.
