ஒரே நாளில் 90,303 பேருக்கு கொரோனா உறுதி! கதி கலங்கியிருக்கும் தென் அமெரிக்க நாடு
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 90,303 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இது, உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் தற்போதையை தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட, கிட்டத்தட்ட இருமடங்கு பாதிப்பு ஆகும்.
இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை 11,693,838-ஆக உயர்துள்ளதாக பிரேசில் நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,648 பேர் இந்த கொடுந்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 284,775-ஆக அதிகரித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசில் தற்போது உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை மற்றும் அதிக எண்ணிக்கையிலான சிகிச்சைப் பெற்றுவோரை கொண்டுள்ளது.
பிரேசில் சமீபத்தில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கையில் இந்தியாவை பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேசில் ஒன்றாகும். தற்போது, அந்நாட்டில் சராசரியாக 100,000 மக்களுக்கு 136 இறப்புகள் மற்றும் 5,565 தொற்றுகள் உள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், பிரேசில் இதுவரை 14.18 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.