கொரோனா பாதித்தவர்களை இந்த நோய் தாக்குமா? வெளியான அதிர்ச்சி தகவல்
கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நினைவாற்றல் பாதிக்கப்படுவதாக ஆய்வில் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸின் மாறுபாடான Omicron குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே Omicron-னின் புதிய அறிகுறிகள் மற்றும் விளைவுகள் பற்றி நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இது தொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் Omicron பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் நீண்ட காலம் நீடிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா நோயில் இருந்து குணமாகியவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாவிட்டாலும் நினைவாற்றல் பாதிப்பு மக்களிடம் காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நினைவாற்றல் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்த காலங்களில் நடந்த சில நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை கூட ஏற்படலாம்.
நினைவாற்றல் பாதிப்பின் தாக்கத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர் சுமார் 6 முதல் 9 மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பக்கூடும்.
நீண்ட நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தசை வலி, சீரற்ற இதயத்துடிப்பு, இருமல் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகின்றது.