இந்த காய்ச்சலால் தான் கொரோனா பரவியது? பிரித்தானியா- சீனா விஞ்ஞானிகள் பகீர் தகவல்
2018ல் சீனாவில் பரவிய பன்றிக் காய்ச்சலால் கொரோனா மனிதர்களுக்கு தொற்ற வழி வகுத்திருக்கும் என பிரித்தானியா மற்றும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் 2018 ஆம் ஆண்டில் சீனாவில் பரவி பன்றி இறைச்சி விநியோகத்தை சீர்குலைத்து மற்றும் மாற்று இறைச்சிகளை நாடியவர்களால் மனிதர்களுக்கு வைரஸ் தொற்ற அதிக வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் பன்றி இறைச்சி முக்கிய இறைச்சியாகும், உலகின் பாதி பன்றிகள் அந்நாட்டில் தான் வளர்க்கப்படுகின்றன, ஆனால் 2018ல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றிகளை பெரியளவில் கொல்ல வேண்டியிருந்தது.
பன்றி இறைச்சியின் வீழ்ச்சி காட்டு விலங்குகள் உள்ளிட்ட மாற்று இறைச்சிகளுக்கான தேவையை அதிகரித்தது, இதனால் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தொற்ற வழி வகுத்திதிருக்கும் என்று பிரித்தானியா மற்றும் சீன விஞ்ஞானிகள் குழு பரிந்துரைத்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த அறிக்கை இன்னும் மறுபரிசீலனை செய்யப்படவில்லை. வேட்டையாடுவதன் மூலமாகவோ அல்லது சந்தைக்குச் சென்று வெவ்வேறு இறைச்சிகளைப் பெறுவதாலோ அதிகமான வனவிலங்குகள் மனித உணவுச் சங்கிலியில் இடம்பெறுகிறது,
இது அதிகரித்தால், மனிதர்களுக்கு நோய் தொற்றும் வாய்ப்பு அதிகரிக்கும்.
மனித உணவுச் சங்கிலியில் அதிகமான வனவிலங்குகளை சேர்ப்பதின் மூலமாக கொரோனா வைரஸ் மனிதர்களுக்குள் பரவுவதற்கான வாய்ப்பை இப்போது அதிகரித்து வருகிறீர்கள் என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் வைரஸ் மரபியல் மற்றும் உயிர் தகவல்தொடர்பு பேராசிரியர் டேவிட் ராபர்ட்சன் கூறினார்.