பிரபல ஐரோப்பிய நாட்டின் பட்டத்து இளவரசி-இளவரசருக்கு கொரோனா! அரண்மனை வெளியிட்டு முக்கிய தகவல்
பிரபல ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் பட்டத்து இளவரசி மற்றும் இளவரசருக்கு கொரோனா உறுதியானதாக அரண்மனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுவீடன் மன்னரின் மூத்த மகள் பட்டத்து இளவரசி விக்டோரியா மற்றும் அவரது கணவர் இளவரசர் டேனியல் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டத்து இளவரசிக்கு நேற்று இரும்மல் இருந்தது, முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார், அதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது என அரண்மனையின் தகவல் மேலாளர் Margareta Thorgren கூறினார்.
பட்டத்து இளவரசி மற்றும் இளவரசர் டேனியல் லேசான அறிகுறிகளை காண்பித்தனர், ஆனால் நலமாக உணர்ந்தனர்.
தொற்று உறுதியான உடனேயே, இளவரசி, இளவரசர் டேனியல், இளவரசி Estelle மற்றும் இளவரசர் ஆஸ்கார் ஆகியோர் Haga Castle வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர் என்று ஸ்வீடன் அரண்மனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரண்மனை மருத்துவரின் மேற்பார்வையில் தொற்று கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இளவரசி விக்டோரியா-இளவரசர் டேனியல் தம்பதியுடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் யாருக்கும் தொற்றின் பாதிப்பு இல்லை என உறுதியானதாக அரண்மனை தெரிவித்துள்ளது.
