கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்தடுத்து மரணம்! அதிகாரிகள் தீவிர விசாரணை
தென் கொரியாவில் அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் மரணமடைந்தது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்த இருவரும் ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (KDCA) இயக்குனர் Jeong Eun-kyeong விளக்கமளித்ததாவது, cerebrovascular நோயால் பாதிக்கப்பட்ட 63 வயதான நர்சிங் ஹோம் நோயாளி, நான்கு நாட்களுக்கு முன்பு தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர், அதிக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை காட்டினார்.
63 வயதான நபர் செவ்வாய்க்கிழமை பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், ஆனால் blood poisoning மற்றும் நிமோனியா அறிகுறிகளைக் காட்டிய பின்னர் உயிரிழந்தார் என Yonhap ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை இருதயக் கோளாறு மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 50 வயதான மற்றொரு நர்சிங் ஹோம் நோயாளி, பலமுறை மாரடைப்புகளுக்கு ஆளான பின்னர் உயிரிழந்தார், அவருக்கு ஒரு நாளைக்கு முன்னர் தடுப்பூசி போடப்பட்டதாக KDCA தெரிவித்துள்ளது.
இருவரின் இறப்புகளுக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக KDCA கூறியது, ஆனால் தடுப்பூசி காரணமா என்பதை உறுதிப்படுத்தவில்லை.
தடுப்பூசியால் மரணம் ஏற்பட்டதா என்பதை உறுதிப்படுத்த, உள்ளூர் அதிகாரிகளுடன் KDCA தொற்றுநோயியல் ஆய்வுகளை நடத்துகிறது என Jeong Eun-kyeong கூறினார்.
சியோலில் உள்ள அஸ்டிராஜெனேகா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், இச்சம்பவம் தொடர்பில் நிறுவனத்திற்கு எந்தக் கருத்தும் இல்லை என்று கூறினார்.
கொரோனா தடுப்பூசியால் இறந்தவர்களுக்கு 430 மில்லியன் won இழப்பீடு வழங்குவதாக KDCA முன்பு கூறியிருந்தது நினைவுக் கூரத்தக்கது.