அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை!
அமெரிக்காவிற்கு வருவோர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்ற சட்டம் நீக்கப்படவுள்ளது.
வெள்ளை மாளிகையின் அறிவிப்பு
மே மாதம் 12ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய கொரோனா தடுப்பூசி அவசியம் இல்லை என ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதாவது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஃபெடரல் ஊழியர்கள், காண்டிராக்டர்கள், சர்வதேச பயணிகள் ஆகியவர்களுக்கு நீக்கியுள்ளது.
The Biden-Harris Administration will end COVID-19 vaccination requirements for Federal Employees, Contractors, International Travelers, Head Start Educators, and CMS-Certified Facilities: White House pic.twitter.com/86gQNKV0Wq
— ANI (@ANI) May 1, 2023
மேலும் வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழப்போர் எண்ணிக்கை 95 சதவீதம் வரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 91 சதவீதமுமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆகவே இனி அமெரிக்காவிற்கு வருவோருக்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை.
கடந்த மூன்று ஆண்டுக்காலமாக இருந்த இந்த முடிவை தற்போது முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.