உலக அளவில் அதிக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட டாப் 5 நாடுகளின் பட்டியல்! எந்த நாடு முதலிடத்தில் இருக்கு பாருங்க
உலக அளவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடுகளின் பட்டியல் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன் படி, மக்கள்தொகையின் அடிப்படைகள் அதிக அளவில் கொரோனா தடுப்பூசியை செலுத்திய முதல் நாடுகளின் விவரத்தை our world in data என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.
இதில் சீனா 40 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசியை போட்டு முதல் இடத்திலும், அமெரிக்கா 27 கோடி மேலான மக்களுக்கு போட்டு இரண்டாம் இடத்திலும், 18 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
இதைத் தொடர்ந்து பிரித்தானியா மற்றும் பிரேசில் நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களிலும், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
மக்கள் தொகை இல்லாமல், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சதவீத அடிப்படையில் எடுத்துக் கொண்டால், இஸ்ரேல் முதலிடத்திலும், மங்கோலியா இரண்டாம் இடத்திலும், பிரித்தானியா மூன்றாவது இடத்திலும், பஹ்ரைன், ஹங்கேரி ஆகிய நாடுகள் நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
கண்டங்களின் அடிப்படையில் பார்த்டால், ஆசிய கண்டத்தில், 50 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வட அமெரிக்காவில் இதுவரை 21.58 சதவீதம் பேருக்கும், ஐரோப்பாவில் 19.6 சதவீத பேருக்கும், தென் அமெரிக்காவில் 6.36 சதவீதபேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா கண்டத்தை பொறுத்தவரை, அங்கு வெறும் 1.66 சதவீதம் பேருக்கு தான் கொரோனா தடுப்பூசியும், ஓசினியா கண்டத்தில் 0.26 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி வாங்குவதில் உலக நாடுகளிடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது.
ஏனெனில், வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்து கொள்கின்றன. ஆனால் ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.