தடுப்பூசி பக்கவிளைவுகள்... பெரியளவிலான ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி, நோயைத் தடுப்பதில் 79% பயனுள்ளதாக இருப்பதாக அமெரிக்கா, சிலி, பெரு மேற்கொள்ளப்பட்ட பெரியளவிலான ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கடுமையான அல்லது சிக்கலான நோய் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக 100% பயனுள்ளதாக இருந்தது என்றும், தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என மருந்து தயாரிப்பாளரான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரத்தக் கட்டிகளின் அறிக்கைகள் குறித்த மேற்கொள்ளப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து பல நன்மைகள் அபாயங்களை விட அதிகமாக இருப்பதாக ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பு கூறியதையடுத்து பல நாடுகள் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை மீண்டும் பயன்படுத்துவதைத் தொடர்ந்து நிலையில் இந்த புதிய தகவல்கள் வந்துள்ளன.
இதனிடையே, அனைத்து வயதினரும் அடங்கிய 32,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்ற ஆய்வின் முடிவுகளை அஸ்ட்ராஜெனெகா வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரத்தக் கட்டிகள் குறித்து சுயாதீன பாதுகாப்புக் குழு குறிப்பிட்ட ஆய்வை நடத்தியது, அத்துடன் மூளையில் மிகவும் அரிதான இரத்த உறைவான cerebral venous sinus thrombosis குறித்து சுயாதீன நரம்பியல் நிபுணரின் உதவியுடன் ஆய்வு நடத்தியது என்று அஸ்ட்ராசெனெகா தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 21,583 பங்கேற்பாளர்களிடையே, thrombosis அல்லது thrombosis ஆல் வகைப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் ஆபத்து அதிகம் இல்லை என்று சுயாதீன பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.