கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள ஆய்வகத்தில்தான் உருவாக்கப்பட்டுள்ளது: ஆதாரங்களுடன் அறிவியலாளர்கள் அதிரடி
கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவியலாளர்களின் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அறிவியலாளரான பேராசிரியர் Angus Dalgleish மற்றும் நார்வே நாட்டு அறிவியலாளரான Dr. Birger Sørensen ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள ஆய்வறிக்கை ஒன்றில் இந்த அதிரடி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி ஒன்றைத் தயாரிப்பதற்காக, COVID-19 தொற்றுக்கு ஆளான நோயாளிகளின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை தாங்கள் ஆய்வு செய்யும்போது, அவர்களை நோய்வாய்ப்படச் செய்திருந்த அந்த SARS-Cov-2 என்னும் வைரஸ் தானாக உருவான ஒன்று அல்ல, அது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பது அதன் உடல் அமைப்பிலிருந்து தெரியவந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, சீன குகை வவ்வால்களின் உடலில் இயற்கையாகவே காணப்படும் கொரோனா வைரஸை எடுத்து, ஆய்வகத்தில் வைத்து அதில் மாற்றங்கள் செய்து, அதை பயங்கரமாக பரவக்கூடிய SARS-Cov-2 என்னும் கொலைகார கொரோனா வைரஸாக மாற்றியுள்ளார்கள் சீன அறிவியலாளர்கள் என்கிறார்கள் Dalgleish மற்றும் Sørensen ஆகிய அறிவியலாளர்கள்.
இந்த விடயம் குறித்த விவரங்களை தாங்கள் ஒரு ஆண்டு காலமாகவே வெளியிட முயன்று வந்ததாகவும், ஆனால் பெரிய அறிவியலாளர்கள் கூட, தங்கள் கூற்றை ஏற்றுக்கொள்ள மறுத்து, கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து இயற்கையாக மனிதர்களிடம் பரவியதாகவே நம்பிக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள் அவர்கள்.
சமீபத்தில்தான் மூத்த கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் பெரும் பல்டியடித்து, கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் வைரஸ் ஆய்வகத்திலிருந்துதான் தப்பியதாக சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த அதிரடி ஆய்வில் மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தும் விடயமும் கூறப்பட்டுள்ளது. அதாவது, இது குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் வேண்டுமென்றே அழிக்க அல்லது மறைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பேச முன் வந்த சீன அறிவியலாளர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கிறது அந்த ஆய்வறிக்கை.
இதற்கிடையில், அமெரிக்க அதிபரான ஜோ பைடன் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது குறித்து மீண்டும் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இன்னொரு பக்கம், வுஹான் ஆய்வகத்தில் இப்படி ஒரு சர்ச்சைக்குரிய ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், அதற்கு நிதி உதவி செய்ததாக அமெரிக்க சுகாதாரத்துறை அலுவலர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.