பெருகும் இறப்பு எண்ணிக்கை... மருத்துவமனை நடைபாதையில் சடலங்கள் குவிப்பு
கொரோனா பாதிப்பால் ஆஸ்திரியா நாட்டில் நிலைமை மிக மோசமாக மாறியுள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் சடலங்களை பாதுகாக்க முடியாமல் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது. அதேவேளை மருத்துவர்களும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சால்ஸ்பர்க் பகுதியில் கொரோனா நோயாளிகளில் யாருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், யாரை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதை மருத்துவர்கள் முடிவு செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதாவது கொரோனா நோயாளிகளில் யார் இறக்க வேண்டும் என மருத்துவர்களே முடிவு செய்யும் பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆஸ்திரியாவின் முக்கிய பகுதியில் மருத்துவர்களால் உறுதியான முடிவெடுக்க முடியாமல், பல நோயாளிகள் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு காரணமாக, சிகிச்சை கிடைக்காமல் பல நோயாளிகள் இறந்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேலும், மருத்துவமனை வளாகத்தின் நடைபாதைகளில் சடலங்களை பாதுகாக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் மின் மயானங்களின் பற்றாக்குறையால் கொரோனாவால் இறந்தவர்களை எரியூட்ட பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.
பல மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள், தங்களால் இயன்ற அளிவுக்கு முயன்று வருவதாகவும், ஆனாலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.