பதிலடி! சரமாரி தாக்குதலால் ஏமன் நகரையே சிதறடித்த சவுதி கூட்டு இராணுவப் படை! வெளியிட்ட வீடியோ
ஈரான் ஆதரவுப்பெற்ற ஹவுத்தி போராளிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் Marib நகரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு இராணுவப் படை சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை Hodeidah நகரில் ஏமன் இராணுவத்திற்கும், ஹவுத்தி போராளிகளுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.
சமீப நாட்களாக நடந்து வரும் மோதலில் Hodeidah மற்றும் Marib நகரங்களில் ஏமன் இராணுவம் சிறப்பாக முன்னேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், Marib நகரில் உள்ள பொதுமக்களை குறிவைத்து ஹவுத்திகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து, Marib நகரில் உள்ள ஹவுத்திகளுக்கு சொந்தமான வான் பாதுகாப்பு அமைப்பை சவுதி அரேசியா தலைமையிலான கூட்டு இராணுவப் படை தாக்கி அழித்துள்ளது.
இந்ந தாக்குதலில் ஏவுகணைகள் ஏவும் கருவி, ரேடார், கிடங்கு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
BREAKING: Saudi led-coalition destroyed a hostile Houthi air defense system in the Ma'rib front.
— الدفاع العربي Defense Arab (@defensearab) March 12, 2021
• Missiles launchers, radars, warehouse & command & control centre have been eliminated.
• The 3rd air defense system to be destroyed by the coalition this week. pic.twitter.com/jvhl8hzPHM
இந்த வாரத்தில் சவுதியால் அழிக்கப்பட்ட ஹவுத்தியின் 3வது வான் பாதுகாப்பு அமைப்பு இதுவாகும்.