3000 உயிர்களை உடனடியாக கொல்லும் பிரபல நாடு! அரசு முக்கிய உத்தரவு
ஹாங்காங்கில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து சுமார் 3000 பன்றிகளை கொல்ல அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஹாங்காங் நகரின் பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.
மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பில்லாத இந்த நோய் ஹாங்காங்கில் கண்டறியப்படுவது மிக அரிதான ஒன்றாகும்.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றிகள் மூலம் நோய் ஹாங்காங்கில் பரவியது, இதன் விளைவாக அப்போது 10,000 பன்றிகள் கொல்லப்பட்டது.
தற்போது வடக்கில் சீன எல்லைக்கு அருகே உள்ள ஹாங்காங்கின் Yuen Long பகுதியில் உள்ள பண்ணையில் புதிய பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
நோய் பரவல் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், வைரஸ் ஒரே ஒரு பண்ணையில் மட்டுமே பரவுயுள்ளதாகவும், அதன் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஹாங்காங் விவசாயம் மற்றும் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வழக்கமான தோன்றும் நோய் ஆகும், 2018 மற்றும் 2019 சீனாவில் உள்ள பண்ணைகளை அழிவுக்கு ஆளாக்கியது.
தற்போது மீண்டும் இந்த குளிர்காலத்தில் பரவி குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.