வடகொரியாவுக்கு துரோகம் செய்த நாடு! இந்த முறை அமெரிக்கா இல்லை: எந்த நாடு தெரியுமா?
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து வடகொரியாவுக்கு எதிராக மிகப்பெரிய விரோத செயலை செய்த மலேசியாவுடனான தூதரக உறவுகளை முற்றிலுமாக துண்டிப்பதாக வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் எப்போதுமே பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக அணுஆயுத விவகாரத்தில், அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு உள்ளது.
இந்நிலையில் மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த, முன் சோல் மியோங் என்பவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்கா அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி மலேசிய அரசை கேட்டுக்கொண்டது.
இதை ஏற்று, முன் சோல் மியோங்கை அமெரிக்காவுக்கு நாடு கடத்த மலேசிய நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.