ஆறு வயதுச் சிறுமி என்று எண்ணி தத்தெடுத்த தம்பதியர்: திகிலை ஏற்படுத்திய சம்பவங்கள்
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருத்தியை தத்தெடுத்துள்ளனர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதியர். ஆனால், அந்தச் சிறுமி, சிறுமியே இல்லை என்பது பிறகுதான் அவர்களுக்குத் தெரியவந்தது.
அபூர்வ எலும்புப் பிரச்சினைகள் கொண்ட சிறுமி
அமெரிக்கர்களான மைக்கேல் மற்றும் கிறிஸ்டின் (Michael and Kristine Barnett) தம்பதியர், நட்டாலியா கிரேஸ் (Natalia Grace) என்னும் ஆறு வயதுடைய உக்ரைன் நாட்டுச் சிறுமியை தத்தெடுத்துள்ளனர்.
நட்டாலியா பார்ப்பதற்கு சற்றே வித்தியாசமாக காணப்பட்டாலும், அபூர்வ எலும்பு பிரச்சினை கொண்டதால் அவள் அவ்வாறு காட்சியளிப்பதாக மைக்கேல் மற்றும் கிறிஸ்டின் தம்பதியர் எண்ணியுள்ளனர்.
Image: Investigation Discovery
உண்மை தெரியவந்தபோது
ஒருநாள் இரவு மைக்கேல் தற்செயலாக கண் விழிக்க, நட்டாலியா தன் காலருகே கத்தியுடன் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டுள்ளார்.
சில நாட்கள் காலையில் எழுந்திருக்கும்போது, படிக்கட்டுகளில் கால்களில் குத்தும் வகையில் போர்ட் பின் என்னும் ஊசிகள் நிறுத்தப்பட்டிருப்பதை தம்பதியர் கவனித்துள்ளார்கள்.
அத்துடன், அடிக்கடி சமையலறையிலிருந்து கத்திகள் காணாமல்போக, அவை நட்டாலியாவின் கட்டிலுக்குக் கீழே மறைத்துவைக்கப்படிருந்ததையும் தம்பதியர் கண்டுபிடித்துள்ளனர்.
Image: Investigation Discovery
ஒருமுறை தன்னுடைய காபியிலும் நட்டாலியா விஷம் கலந்து தங்களைக் கொல்ல முயன்றதாக தெரிவித்துள்ளார் கிறிஸ்டின்.
விடயம் என்னவென்றால், நட்டாலியா ஆறு வயதுச் சிறுமி அல்ல, 22 வயது பெண். அவருக்கு மாதவிடாய் ஆவதையும் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார் கிறிஸ்டின்.
Image: ITV
மருத்துவ ரீதியிலும் இந்த உண்மை உறுதி செய்யப்பட்டது முதல், நட்டாலியா எப்போது தங்களைக் கொலை செய்வாள் என தாங்கள் பயந்துகொண்டே இருந்ததாக தெரிவிக்கும் தம்பதியர், குழந்தை ஒன்றைத் தத்தெடுக்க ஆசைப்பட்டு, தினமும் திகிலுடன் வாழும் நிலை தங்களுக்கு ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
Image: Investigation Discovery
மைக்கேல் மற்றும் கிறிஸ்டின் வாழ்வில் நட்டாலியாவால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, இம்மாதம் 31ஆம் திகதி வெளியாக உள்ளது.
Image: Investigation Discovery