சொந்த மகனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த பெற்றோர்: விசாரணையில் அம்பலமான மேலும் இரு கொலைகள்
ஈரானில் சொந்த மகனை திட்டமிட்டு, மிகக் கொடூரமாக கொலை செய்த பெற்றோர், ஏற்கனவே இரு கொலைகள் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
ஈரானிய திரைப்பட இயக்குநரான 47 வயது Babak Khorramdin என்பவரது உடல் பாகங்கள் கடந்த மே மாதம் மூன்று குப்பை அள்ளும் பைகளில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், Babak-ன் பெற்றோர்களான Akbar Khorramdin(81), மற்றும் அவரது மனைவி Iran Mousavi(74) என்பவர்களை கைது செய்தனர்.
விசாரணையில், தமது மகனுக்கு தூக்க மாத்திரை அளித்து தூங்க வைத்து, பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், குளியலறையில் வைத்து உடலை துண்டு துண்டாக வெட்டி, மூன்று பைகளில் வெளியே வீசியதும் ஒப்புவித்தனர்.
இந்த நிலையில் விச்சாரணை அதிகாரிகளை அதிரவைத்த மேலும் இரு கொலை சம்பவங்களையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் தங்களின் ஒரே மகளின் கணவனை கொன்று மறைவு செய்ததாகவும், 2018ல் மகளையும் கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மூவரையும் ஒரே போன்றே கொலை செய்துள்ளதாகவும் Akbar Khorramdin தெரிவித்துள்ளார். மேலும் தமது பிள்ளைகளை கொன்றதில் தமக்கு எவ்வித குற்ற உணர்வும் இல்லை எனவும்,
அவர்கள் ஒழுங்கற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும், தமது மகள் போதை மருந்து பயன்பாட்டில் இருந்ததை தாம் உறுதி செய்ததாகவும், இவர்கள் சமூகத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் என்பதாலையே மனைவியின் ஒப்புதலுடன் மூன்று கொலைகளையும் செய்துள்ளதாக Akbar Khorramdin அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
Akbar Khorramdin ஓய்வு பெற்ற இராணுவ கேணல், அவர் உளவியல் பாதிப்பு காரணமாக கொலைகளை செய்திருக்கலாம் என்றே நீதிமன்றம் முடிவுக்கு வந்திருக்கிறது.
மேலும், மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பொதுவாக கொலை குற்றத்திற்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கொலை செய்தால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.