பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய டீக்கடை நடத்தும் தம்பதியினர்.., கேரளாவில் இருக்கும் கருணை உள்ளங்கள்
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்குள்ள டீக்கடை நடத்தும் தம்பதியினர் பணம் கொடுத்து உதவி செய்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 344 -ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதுவரை 9328 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தம்பதியின் நிதியுதவி
நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடிகை மற்றும் நடிகர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.
அந்தவகையில், கொல்லம் மாவட்டம், பள்ளித்தோட்டத்தில் டீக்கடை நடத்தி வரும் தம்பதியினர் சேர்த்து வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
கொல்லம் மாவட்டம், பள்ளித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுபைதா. இவரும், இவரது கணவரும் இணைந்து சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.
அதில் வரும் வருமானத்தையும், ஓய்வூதியத்தையும் வைத்து சேர்த்து ரூ.10 ஆயிரம் ரூபாயை நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நன்கொடை அளித்துள்ளனர்.
இதுகுறித்து சுபைதா கூறுகையில், "நாங்கள் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக சில நாட்களுக்கு முன்பு வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வைத்திருந்தேன்.
அப்போது தான் நிலச்சரிவில் எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு உதவ அனைவரிடமிருந்தும் பங்களிப்புகள் கேட்கப்படுவது குறித்து டிவியில் பார்த்தோம்.
உடனே எனது கணவர் வட்டியை பிறகு செலுத்தலாம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்த பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
எங்களால் வயநாடு செல்ல முடியாது என்பதால் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று பணத்தை டெபாசிட் செய்தோம். என்னால் முடிந்த சிறிய பங்களிப்பு" என்றார்.
இது மாதிரி சுபைதா நிதியுதவி வழங்குவது முதல் முறையல்ல. முன்னதாக, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தனது நான்கு ஆடுகளை விற்று நிவாரண நிதி வழங்கியுள்ளார். ஆனால், அதனை பலர் விமர்சனமும் செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |