25 ஆண்டுகளுக்கும் மேல் போலியாக மருத்துவம் பார்த்த தம்பதியினர்.., அம்பலமான பின்னணி
தமிழக மாவட்டம், தருமபுரியில் 12 -ம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக போலியாக தம்பதியினர் மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.
போலி மருத்துவம்
தருமபுரி பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள்ள குப்பாண்டி தெருவில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனபால் கிளினிக் இயங்கி வருகிறது. இந்த கிளினிக்கை கணவன், மனைவியான அன்பழகன் (60) மற்றும் ஜெயந்தி (54) ஆகிய இருவரும் சேர்ந்து நடத்தி வந்தனர்.
இதில் அன்பழகன் 12 -ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2012 -ம் ஆண்டு போலி மருத்துவர்கள் என மருத்துவ துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.
மீண்டும் கிளினிக்
தற்போது, பல் மருத்துவம் படித்துள்ள பாரதி பிரியை(37) என்ற பெண்ணின் பெயரில் தனபால் கிளினிக்கை நடத்தி வருகின்றனர். அதுவும், பல் மருத்துவர் மற்றும் பொது மருத்துவர் என பெயர் பலகை வைத்துள்ளனர்.
இந்த கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளுக்கு போலியாக மருத்துவம் பார்க்கும் கணவன், மனைவி தான் ஊசி போடுவது மற்றும் மருந்துகளை கொடுப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.
இவர்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால், போலி மருத்துவர்களால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |