பிரபல கிரிக்கெட் வீராங்கனையிடம் அணி தேர்வாளர் அத்துமீறல் - நீதிமன்றம் கண்டனம்

Sexual harassment Bangladesh Cricket Team
By Karthikraja Feb 03, 2026 07:44 AM GMT
Report

முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையிடம் அணி தேர்வாளர் அத்துமீறல் செய்த விடயத்தில் விசாரணையை தாமதப்படுத்தியதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜகனரா ஆலம்

32 வயதான ஜகனரா ஆலம்(Jahanara Alam), 2011 ஆம் ஆண்டு முதல் வங்கதேச கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். 

பிரபல கிரிக்கெட் வீராங்கனையிடம் அணி தேர்வாளர் அத்துமீறல் - நீதிமன்றம் கண்டனம் | Court Condemn Bcb On Jahanara Alam Allegation

அயர்லாந்திற்கு எதிராக 5 விக்கெட்கள் வீழ்த்தி, வங்கதேச மகளிர் அணியில் 5 விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

மேலும், வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்ற 2018 மகளிர் டி20 ஆசியக் கிண்ணம், 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியில் ஜகனரா ஆலம் இடம் பெற்றிருந்தார். 2 ODI போட்டிகளில் அணித்தலைவியாக அணியை வழி நடத்தவும் செய்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த மகளிர் உலகக் கிண்ண தொடரின் போது, ​​முன்னாள் வீரரும், தேர்வாளரும், மேலாளருமான மஞ்சுருல் இஸ்லாம்(manjurul islam) தன்னை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாக கண்ணீருடன் குற்றச்சாட்டு வைத்தார். 

பிரபல கிரிக்கெட் வீராங்கனையிடம் அணி தேர்வாளர் அத்துமீறல் - நீதிமன்றம் கண்டனம் | Court Condemn Bcb On Jahanara Alam Allegation

மேலும், தன் தோள் மீது கை வைத்து மாதவிடாய் குறித்து கேட்டதாகவும், நான் அவரிடம் இருந்து விலக முற்பட்ட போது, தனக்கு எதிராக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து பலமுறை அணி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரரான மஞ்சுருல் இஸ்லாம், இது பொய்யான குற்றச்சாட்டு என மறுத்துள்ளார். 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தாரிக் உல் ஹக்கீம் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அமைத்தது. இதன் பின்னர் இந்த குழு 5 பேராக விரிவுபடுத்தப்பட்டது.

நீந்திமன்றம் கண்டனம்

விசாரணைக் குழு அமைக்கப்பட்டாலும், விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டுமென்றே தாமதம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

முதல்முறையாக டிசம்பர் 2 ஆம் திகதி, கால நீட்டிப்பு செய்தது பின்னர் பல்வேறு காரணங்களை கூறி அறிக்கை தாக்கல் செய்வதை தாமதப்படுத்தியது. 

பிரபல கிரிக்கெட் வீராங்கனையிடம் அணி தேர்வாளர் அத்துமீறல் - நீதிமன்றம் கண்டனம் | Court Condemn Bcb On Jahanara Alam Allegation

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மகளிர் கிரிக்கெட் வீரங்கனைகளுக்கு பாதுகாப்பான, துன்புறுத்தல் இல்லாத சூழலை உறுதி செய்யத் தவறியதை ஏன் சட்டவிரோதமாக அறிவிக்கக்கூடாது என்பதை விளக்குமாறு BCBக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, BCB விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தற்போது ஐசிசியின் கவனத்திற்கு சென்றுள்ளதால், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US