50 -வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 50 -வது முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு
கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கடந்த 2016 -ம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பின்னர், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு
இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட விசாரணையில், "கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், அதில் பணமோசடி செய்யப்பட்டதற்கான கோப்பு இருப்பதையும் அமலாக்கத்துறை நிரூபிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், இன்று காணொலிமூலம் சென்னை முதன்மை அமர்வு முன்பு செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்தினர். அப்போது, இவரது நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |