Covaxin தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனா காலத்தில் Covaxin தடுப்பூசி போட்டவர்களுக்கும் உடல்நலம் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ரத்த உறைதல் ஏற்படலாம் என்று அதிர்ச்சியான தகவல் வெளியாகியது.
இந்நிலையில், கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Covaxin தடுப்பூசி
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்டு (Covishield) ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதில், கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவில் இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் (Bharat Biotech Co) தயார் செய்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் Covaxin தடுப்பூசி போட்டவர்களுக்கும் உடல்நலம் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட 635 பேர் இளைஞர்கள் உள்பட மொத்தம் 1,024 பேர் கலந்து கொண்டனர்.
அதனடிப்படையில், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், ஆய்வில் கலந்து கொண்ட 47.9% இளைஞர்கள் மற்றும் 42.6 % நடுத்தர வயதினருக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
ஆய்வில் இளைஞர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை
* தோல் சம்மந்தமான நோய் - 10.5 % பேர்
* நரம்பு சம்பந்தமான நோய் - 4.7 % பேர்
* பொதுவான பிரச்சனைகள் - 10.2% பேர்
ஆய்வில் நடுத்தர வயதினருக்கு ஏற்பட்ட பிரச்னை
* தசை சம்பந்தமான பிரச்னை - 5.8 % பேர்
* நரம்பு சம்பந்தமான பிரச்னை - 5.5 % பேர்
* பொதுவான பிரச்சனைகள் - 8.9 % பேர்
குறிப்பாக நடுத்தர வயதினர் 1.6% பேருக்கும் , பெண்கள் மற்றும் அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் 2.8 % பேருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |