கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல..!அமெரிக்கா வெளியீட்டு புதிய ஆய்வு முடிவுகள்
கொரோனா வைரஸ் இயற்கையான வைரஸ் இல்லை என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல்
கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு உருவானது என்பது குறித்த விவாதம் நீடிக்கும் நிலையில், அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு (CIA), இந்த வைரஸ் சீனாவின் ஒரு ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்ற கோட்பாட்டிற்கு வலு சேர்த்துள்ளது.
இதுவரை நடைபெற்ற ஆய்வுகளின் அடிப்படையில், கரோனா வைரலானது சீன ஆய்வகங்களில் இருந்து பரவி இருக்கலாம் என்ற கோட்பாடு மிகவும் சாத்தியமானது என்று CIA தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவிய சீனாவின் வூஹான் நகரில் அதிக அளவில் வைரஸ் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த வைரஸ் வௌவால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்ற கூற்று பரவலாக நம்பப்பட்டு வந்தது.
ஆனால், வுஹானுக்கு அருகில் உள்ள வௌவால் கூட்டங்கள் சுமார் 1,600 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால், இந்த கூற்றின் மீதான கேள்விக்குறிகள் அதிகரித்துள்ளன.
அமெரிக்காவின் புதிய மதிப்பீடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம் இந்த விவகாரத்தில் புதிய மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
CIA-வின் இந்த புதிய கண்டுபிடிப்பு, கொரோனா வைரஸ் தொடர்பான உலகளாவிய விவாதத்தை புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |