அரசியலால் பாழ்படுத்தப்பட்டுள்ளது... இதை இப்படி பாருங்கள்! உலக நாடுகளுக்கு WHO அழைப்பு
கொரோனா தோற்றம் குறித்து விசாரணையை அரசியலிருந்து வேறுபட்டு அறிவியல் பார்வையில் பார்க்கும் படி சர்வதேச சமூகத்திற்கு உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் தலைவர் டாக்டர் மைக் ரியான் கூறியதாவது, கொரோனா வைரஸின் உண்மையான தோற்றும் குறித்து தேடல் அரசியலால் பாழ்படுத்துப்பட்டுள்ளது என கூறினார்.
அரசியல் இல்லாத, குற்றம் சுமத்தாத மற்றும் விஞ்ஞானமும் சுகாதாரமும் முக்கிய நோக்கமாக கொண்ட சூழலில் கொரோனா தோற்றம் குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ரியான் கூறினார்.
இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க அரசாங்கம், சீன நகரமான வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியதுது என்ற நிரூபிக்கப்படாத கோட்பாட்டை மேலும் விசாரிப்பதாகக் கூறியது.
அதற்கு பதிலளித்த சீனா, இந்த கோட்பாட்டை நிராகரித்ததோடு, திசை திருப்புவதாக அமெரிக்கா மீது குற்றம் சாட்டியது.
கொரோனா முதன்முதலில் சீன நகரான வுஹானில் 2019-ன் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது.
எனினும், கொரோனா தோற்றும் குறித்து வுஹான் பயணித்த உலக சுகாதார அமை்ப்பின் சிறப்பு நிபுணர்கள் குழு, வைரஸ் வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்க வாய்ப்பில்லை என கூறியது.
ஆனால், மேலதிக விசாரணை தேவை என்பதால் வைரஸ் வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்பதை முற்றாக நிராகரிக்க முடியாது என கூறியது குறிப்பிடத்தக்கது.