ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை கொரோனா தொடரும்! உலகம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது: WHO தலைவர் எச்சரிக்கை
தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை கொரோனா வைரஸ் தொற்று தொடரும் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் தெரிவித்துள்ளார்.
வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய WHO தலைவர் டாக்டர் Tedros Adhanom Ghebreyesus, உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் 75% வெறும் 10 நாடுகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சிறிய குழுவாக செயல்படும் குறிபிட்ட சில நாடுகள், உலகின் பெரும்பான்மையான தடுப்பூசிகளை தயாரித்து வாங்குகிறிது.
இந்த நாடுகள் உலகின் பிற நாடுகளின் தலைவிதியைக் கட்டுப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
எந்த நாடும் கொரோனா தொற்றலிருந்து பாதுகாப்பாக இல்லை, உலகம் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.
செப்டம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு நாட்டிலும் 10% பேரும், ஆண்டு இறுதிக்குள் 30% பேரும் தடுப்பூசி போட வசதியாக இருக்கும் வகையில் WHO-ன் கோவாக்ஸ் திட்டத்திற்கு போதுமான அளவு டோஸ்களை நன்கொடைகளை வழங்குமாறு உலக நாடுகளை டாக்டர் Tedros Adhanom Ghebreyesus கேட்டுக்கொண்டார்.
WHO மற்றும் GAVI கூட்டாக நடத்தும் கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் பிப்ரவரி முதல் 125 நாடுகளுக்கு 72 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது அவர்களின் 1% மக்கள்தொகைக்கு போதுமானதாக இல்லை என டாக்டர் Tedros Adhanom Ghebreyesus கூறினார்.