பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்த வெறிபிடித்த பசுமாடு!
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களை விரட்டி விரட்டி பசுமாடு ஒன்று முட்டியதும், கடித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்காடு எனும் கிராமத்தில், பசுமாடு ஒன்றை வெறிநாய் கடித்துள்ளது.
இதனால் வெறிபிடித்த அந்த மாடு, சாலையில் செல்பவர்களை விரட்டி விரட்டி முட்டுவதும், கடிப்பதுமாக இருந்தது. பசுமாட்டின் அச்சுறுத்தல் அந்த கிராம மக்களுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, ஒன்று கூடிய கிராம மக்கள் குறித்த பசுமாட்டை பிடித்து அப்புறப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
பின்னர், அறந்தாங்கி கோட்டாச்சியரிடம் இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உத்தரவின்படி தீயணைப்புத்துறை, கால்நடைத்துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கிராமத்து இளைஞர்களின் துணையுடன் குறித்த மாட்டை அவர்கள் பிடித்தனர். அதன் பின்னர் மாட்டிற்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அப்புறப்படுத்தட்டது.