ஓடும் பயணிகள் ரயில் மீது விழுந்த பிரம்மாண்ட கிரேன்: தாய்லாந்தில் கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை
தாய்லாந்தில் கட்டுமானப் பணிகளுக்கான கிரேன்(Crane) ஓடும் ரயிலின் மீது விழுந்த விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஓடும் ரயிலின் மீது விழுந்த கிரேன்
தாய்லாந்து நாட்டின் நக்கோன் ராட்சசிமா(Nakhon Ratchasima) நகரில் பான்தனான் கோட்(Banthaon Khot) பகுதியில் அதிவேக ரயில் பாதை திட்டப் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கட்டுமான கிரேன், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிரேன் விழுந்ததில் ரயில் பெட்டிகள் நசுங்கி சுக்குநூறாக சிதறியுள்ளது.
Death toll rises to seven in Sikhio crane–train collision
— Thai Enquirer (@ThaiEnquirer) January 14, 2026
The death toll from the construction crane collapse onto a passenger train in Sikhio district, Nakhon Ratchasima, has risen to at least seven, while some reports said up to 10 people may have been killed, as rescue teams… pic.twitter.com/rMwNGCtTxl
22 பயணிகள் உயிரிழப்பு
இந்த விபத்தில் கிட்டத்தட்ட 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர், மேலும் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் இருப்பதாகவும் அந்நாட்டு காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் மீட்பு குழுவினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.
அதே சமயம் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |