நிச்சயமான 6 மாதத்தில் பிரித்வி ஷாவை பிரிவதாக அறிவித்துள்ள அவரது காதலி
cricketer prithvi shaw akriti agarwal engagement call off after 6 months: 6 மாதங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவை பிரிவதாக அவரது காதலி அகிருதி அகர்வால் அறிவித்துள்ளார்.
நிச்சயமான 6 மாதத்தில் பிரித்வி ஷாவிற்கு பிரிவு
மஹாராஷ்டிராவை சேர்ந்த பிரித்வி ஷா, கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார்.

26 வயதான பிரித்வி ஷாவிற்கு கடந்த மார்ச் மாதம், நடிகை மற்றும் சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சரான அகிருதி அகர்வால் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம் நடைபெற்று 6 மாதங்களே ஆன நிலையில், நாங்கள் இருவரும் பிரிவதாக அகிருதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்த பிரிவு குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் எதிர்காலம் குறித்த வெவ்வேறு இலக்குகள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக, நானும் என் வருங்காலக் கணவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் ஒருவரையொருவர் எவ்வளவு நேசித்தாலும், எங்கள் பாதைகள் ஒன்றாக இணைய விதிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டோம்.
எங்கள் பொறுப்புகள் மற்றும் தற்போது நாங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நாங்கள் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.
நாம் இருவரும் இனிவரும் காலங்களில் சிறந்ததையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் பெற வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்.
இந்தக் கடினமான நேரத்தில் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்குமாறும், எங்கள் முடிவிற்கான காரணங்கள் குறித்து யூகங்கள் அல்லது அனுமானங்களைச் செய்வதைத் தவிர்க்குமாறும் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் புரிந்துகொண்டு மதித்ததற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து பிரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்கள் உட்பட அனைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டு ஒரு பதிவை மட்டும் நீக்காமல் வைத்துள்ளார்.

2 மாதங்களுக்கு முன்னர் நான் "பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார். வெளியாகும் ஒவ்வொரு வதந்தியும் உண்மைதான். அவரைப் பற்றி நீங்கள் சமூக வலைத்தளங்களில் பார்ப்பது அத்தனையும் உண்மை" என பெயர் குறிப்பிடாமல் அகிருதி அகர்வால் ஸ்டோரி ஒன்றை பதிவு செய்தார்.
பலரும் பிரித்வி ஷாவை பற்றி குறிப்பிடுகிறரர் என விவாதித்த போது, "நான் எந்த பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் அது என வருங்கால கணவர் என தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் பிரியவோ எங்கள் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படவில்லை . நாங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக உள்ளோம்.
எனது வாழ்க்கை துணையின் பெயர் களங்கத்திற்கு உள்ளாகும் போது என்னால் அமைதியாக இருக்க முடியாது. அவர் தான் என் வாழ்க்கை. ஆனால் அவர் மட்டும் என் வாழ்க்கையில் இல்லை" என குறிப்பிட்டார்.