வருண் சக்கரவர்த்தியின் கல்லூரிகால காதல் கதை: கொரோனாவால் தடைபட்ட திருமணம்
கடந்த பிப்ரவரி மாதம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான போட்டியில் ஆடியதன் மூலம், தனது முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமானார் வருண் சக்கரவர்த்தி.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில், நியூஸிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வருண் சக்கரவர்த்தி சாதனை படைத்தார்.
1991 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பிறந்த வருண் சக்கரவர்த்தி, சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை(Architect) பயின்றுள்ளார்.
காதல் கதை
கல்லூரியில் படிக்கும் போதே, மும்பையை சேர்ந்த நேஹா கெடேகர் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதன்பிறகு கிரிக்கெட் மீது இருந்த காதலால் தனது 25 வயதில் கட்டிட கலைஞர் வேலையை துறந்து விட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார்.
உலகளவில் பரவ தொடங்கிய கொரோனா, இவர்களின் திருமணத்திற்கு தடையாக இருந்தது. அதன் பின்னர் 2020ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு 2022 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆத்மன் என பெயர் சூட்டினர்.
பயணம் மற்றும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட நேஹா கெடேகரின் இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தள பக்கத்தை 861 பேர் பின்தொடர்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |