கடலில் இடிந்து விழுந்த கிரிமியா பாலம்: உக்ரைனின் அடுத்தடுத்த ட்ரோன் தாக்குதல்
Crimea's Kerch Bridge Collapses after Ukraine attack: உக்ரைன் நடத்திய அடுத்தடுத்த ட்ரோன் தாக்குதலில் கிரிமியாவின் கெர்ச் பாலம் இடிந்து விழுந்துள்ளது.
கடலில் இடிந்து விழுந்த கிரிமியா பாலம்
ரஷ்யாவையும், கிரிமியாவையும் இணைக்கும் முக்கியமான உள்கட்டமைப்பாக இருந்து வந்த கெர்ச்(Kerch) பாலம் மீது உக்ரைன் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
சாலையின் வளைவு பகுதியில் உக்ரைன் நடத்திய இந்த தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதலில் பாலம் இடிந்து கடலில் விழுந்ததாக உக்ரைனிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாலத்தின் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டதாக டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்திய தலைவர் மைக்கோலா லுகாஷுக் டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் பாலத்தின் வளைவு பகுதி ஒன்று கடலில் விழுந்து கிடக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் அதில் பகிர்ந்துள்ளார்.
இந்த பாலம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆதிக்க லட்சியங்களின் சின்னம் என்றும் மைக்கோலா லுகாஷுக் குறிப்பிட்டுள்ளார்.
2014ம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்ட போது, இந்த பாலத்தை சுமார் 4 பில்லியன் டொலர் செலவில் ரஷ்யா கட்டியெழுப்பியது.