கிறிஸ்டியானோ ரொனால்டோ சொன்னது உண்மைதான்! 'சாதனைகள் தான் அவரை துரத்துகிறது'
இன்ஸ்டாகிராமில் 500 மில்லியன் (50 கோடி) பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் நபராக கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனையை படைத்துள்ளார்.
சாதனைகள் தான் என்னை துரத்துகின்றன
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) சமீபத்தில் பியர்ஸ் மோர்கனுக்கு அளித்த பேட்டியில் 'அவர் சாதனைகளை துரத்துவதில்லை, மாறாக சாதனைகள் தான் அவரைத் துரத்துகின்றன' என்று கூறியிருந்தார். இந்த கூற்று பல முறை மிகவும் சரியானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இப்போது, ரொனால்டோ மற்றொரு சாதனையை உருவாக்கியதன்மூலம், அவரது கூற்று மீண்டும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அது கால்பந்து விளையாட்டிற்கு தொடர்புடையது அல்ல.
Getty Images
இன்ஸ்டாகிராமில் 500 Followers - உலகின் முதல் நபர்
போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் 500 பின்தொடர்பவர்களைக் கொண்ட உலகின் முதல் நபர் என்ற புதிய சாதனையை உருவாக்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் இந்த சாதனையை எட்டினார்.
ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஒப்பிட்டால், 500 மில்லியன் பின்தொடர்பாளர்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் பிரபலம் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றார்.
Getty Images
அவரைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் லியோனல் மெஸ்ஸி 375 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இந்த பட்டியலில் இரண்டாவது பிரபலமாக உள்ளார்.
ரொனால்டோவின் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள மான்செஸ்டர் முடிவு
ரொனால்டோ களத்திற்கு வெளியே இப்படியொரு புதிய சாதனையை படைத்தாலும், அவருடைய கால்பந்தாட்ட களத்தில் இப்போது நேரம் சிறப்பானதாக இல்லை. ஏனெனில், அவர் தனது கிளப்புடன் கடினமான முரண்பாட்டில் இருக்கிறார். வரும் நாட்களில் அவரது ஒப்பந்தம் நிறுத்தப்படவுள்ளது.
அறிக்கைகளின்படி, மான்செஸ்டர் யுனைடெட் அணி ரொனால்டோவின் ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கான சட்டப்பூர்வ வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. இந்த அணியின் கீழ் இப்போது அவர் ஒவ்வொரு வாரமும் அரை மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.