நதியில் விழுந்த நாயைக் காப்பாற்றிய முதலைகள்: ஒரு ஆச்சரிய சம்பவம்
இந்தியாவில், நதியில் விழுந்த நாய் ஒன்றை மூன்று முதலைகள் காப்பாற்றிய விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆச்சரிய சம்பவம்
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில், தெரு நாய்கள் சில சேர்ந்து மற்றொரு நாயைத் துரத்த, அந்த நாய், அங்கு ஓடும் சாவித்ரி நதிக்குள் விழுந்துள்ளது.
அப்போது, அங்கு ஒரு ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆம், நதியில் மூன்று பெரிய முதலைகள் இருந்துள்ளன. அந்த முதலைகள் தண்ணீரில் விழுந்த அந்த நாயை நெருங்கியுள்ளன.
credit Utkarsha chavan
அந்த நாயை கடித்துக் குதறுவதற்கு பதிலாக, அந்த மூன்று முதலைகளும், அந்த நாய் கரை சேர அதற்கு உதவியுள்ளன. தங்கள் மூக்கினால் அந்த நாயைத் தள்ளி, கரையில் கொண்டு சேர்த்துள்ளன அந்த முதலைகள்.
அதுவும், அந்த நாய் அதைத் துரத்திய நாய்க்கூட்டத்திடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, பாதுகாப்பான ஒரு இடத்தில் அது கரையேற அந்த முதலைகள் உதவியுள்ளன.
இது எப்படி சாத்தியம்?
தானாகத் தேடி வந்த இரையை முதலைகள் கொன்று தின்னாமல், அதைக் காப்பாற்றுவது எப்படி சாத்தியம்?
ஒருவேளை அவை வயிறு முட்ட இரை எடுத்திருந்ததால், பசி இல்லாததால் அந்த நாயை சாப்பிடாமல் விட்டுவிட்டனவா?
credit Utkarsha chavan
இது விலங்குகளிடம் காணப்படும் ஒருவகையிலான இரக்கம், அல்லது, மற்றொரு இனத்தை புரிந்துகொண்டு உதவும் குணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
எப்படியும், கொடூரமாக மற்றொரு உயிரைக் கொன்று தின்னக்கூடிய முதலைகள், ஒரு உயிரைக் காப்பாற்றுவது ஆச்சரியத்துக்குரிய செயல்தானே!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |