மேற்குத்தொடர்ச்சி பகுதியில் காட்டு விலங்குகளால் நாசமாகும் பயிர்கள்!
தமிழ்நாட்டில் காட்டு விலங்குகளால் பயிர்கள் சேதமடைவது குறித்து தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் காட்டு விலங்குகளால் வந்து பயிர்களை நாசம் செய்வது குறித்தும் இதனால் விவசாயிகள் படும் கஷ்டங்கள் குறித்தும் அது தொடர்பான தீர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அழிந்துவரும் பயிர்கள் தொடர்பில் விவசாயிகள் கோரிக்கை!
தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் விவசாய நிலங்களுக்குள் காட்டுவிலங்குகள் புகுந்து நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களை அழிக்கின்றன.
இது விவசாயிகளுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்துகின்றது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களின் பிரச்சினைகளை முன் வைத்து, வேளாண்மை நிதிநிலை அறிக்கைக்கான ஆலோசனைக் கூட்டங்களில் அவர்களது பயிர்களை பாதுகாக்குமாறு விவசாயத்துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், மற்றும் அது தொடர்பான அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கான தீர்வு என்ன?
(வனவிலங்குகள்) தொடர்பாக தனிக்குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என முதன்மை வனப்பாதுகாவலர் கூறியுள்ளார்.
காட்டுவிலங்குகளால் ஏற்படும் அழிவுகள் மற்றும் அது தொடர்பான தீர்வுகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு விவசாயம், தோட்டக்கலைத்துறை சார்பில் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டு,பயிர்களை பாதிக்கும் காட்டுவிலங்குகளின் எண்ணிக்கை, பயிர் பரப்பு குறைதல் பற்றியும் அதிலேற்படும் மாற்றங்கள் குறித்த விபரங்கள் பற்றியும் முன் வைக்கவேண்டும்.
அத்தோடு விவசாயிகளின் புகார்கள் அடங்கிய புள்ளி விபரங்கள் மாவட்டரீதியாகவும் ஆண்டுவாரியாகவும், சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் பலவற்றை முன்வைத்துள்ளனர்.