IT Raid -ல் சிக்கிய கோடிக்கணக்கான பணம்.., எங்கள் எம்.பிக்குரியது தான் என ஒப்புக்கொண்ட காங்கிரஸ்
காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ரூ.351 கோடி பணம் தொடர்பாக ஒடிசா காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
IT Raid
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹூவின் உறவினர்களுக்கு தொடர்புடைய மதுபான ஆலைகளில் கடந்த 6 -ம் திகதி வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
பின்னர், ஒரே நேரத்தில் மதுபான ஆலைக்கு தொடர்புடைய ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களிலும் வருமானவரித்துறை குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, மூட்டைகளில் இருந்தும், பைகளில் இருந்தும், பீரோக்களில் இருந்தும் கத்தை கத்தையாக பணம் சிக்கின. இந்த சோதனையில் இதுவரை ரூ.351 கோடி வரை ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி "மணி ஹேய்ஸ்ட்" பார்க்க தேவையில்லை என விமர்சித்திருந்தார்.
காங்கிரஸ் விளக்கம்
இதுகுறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டுமென்று பாஜக வற்புறுத்தி வருகிறது. இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒடிசா மாநில காங்கிரஸ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
ஒடிசா காங்கிரஸ் கமிட்டி தலைவர் சரத் பட்நாயக் பேசுகையில், "ஒடிசா மாநிலத்தில் வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிறகு இதுகுறித்து காங்கிரஸ் பதிலளிப்பதுதான் முறையாக இருக்கும்.
#WATCH | Bhubaneswar: On IT raids on premises linked to Congress MP Dhiraj Prasad Sahu, Odisha Pradesh Congress Committee President Sarat Patnaik says, "There is one businessman who is not from Odisha, he is from Jharkhand. The money has been found in Odisha. The IT raids are… pic.twitter.com/LmoEHDEkvp
— ANI (@ANI) December 12, 2023
அந்த பணம் காங்கிரஸ் எம்.பிக்குச் சொந்தமானது தான் என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், இதனுடன் காங்கிரஸ் கட்சியை எப்படி தொடர்புபடுத்த முடியும். காங்கிரஸ் கட்சிக்கு அவருடன் தொடர்பு இல்லை. அவர் ஒரு தொழிலதிபர்" என்று கூறியுள்ளார். இவர்,பேசியது குறித்து காங்கிரஸ் கட்சியினரே அதிர்ச்சியில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |