Reform UK-விற்கு மற்றொரு கிரிப்டோ பில்லியனர் ஆதரவு- 49 மில்லியன் டொலர் நன்கொடை
Crypto billionaire funds Reform UK: பிரித்தானியாவின் வலதுசாரி அரசியல் கட்சியான Reform UK-விற்கு, தொடர்ந்து இரண்டாவது கிரிப்டோ பில்லியனர் மிகப்பெரிய நன்கொடை வழங்கியுள்ளார்.
கிரிப்டோ பில்லியனர்
Christopher Harborne என்ற 63 வயது கிரிப்டோ முதலீட்டாளர், சுமார் 48.7 மில்லியன் டொலர் (£36 மில்லியன்) நன்கொடை அளித்துள்ளார்.

இதற்கு முன், BitMEX நிறுவனத்தின் இணை நிறுவனர் Ben Delo 49 மில்லியன் டொலர் அளித்திருந்தார்.
இரண்டு நாட்களில் கிடைத்த இந்த நன்கொடைகள், Reform UK-விற்கு மொத்தம் 97 மில்லியன் டொலர் நிதி ஆதரவை பெற்றுத் தந்துள்ளன.
சட்ட சிக்கல்
Harborne, தனது நன்கொடையை “நாட்டிற்கான தன்னார்வ பரிசு” என Daily Telegraph-ல் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த நிதி Reform UK கட்சிக்கு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் Metropolitan Police, Reform UK வெளிநாட்டு நிதி பெற்றதா என்ற சந்தேகத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.
Reform UK தலைவர் Nigel Farage, இந்த நன்கொடைகளை வரவேற்று, “இந்த பில்லியனர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விரும்புவது, பிரித்தானியாவை சரி செய்யக்கூடிய அரசு மட்டுமே” என தெரிவித்துள்ளார்.
நேர்மை இல்லாத கட்சி
இதே நேரத்தில், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் Kemi Badenoch, Reform UK நேர்மை இல்லாத கட்சி என விமர்சித்துள்ளார். Reform UK, 2021-இல் Brexit Party-யிலிருந்து உருவானது.
Farage, “anti-establishment” தலைவராக தன்னை காட்டி, கன்சர்வேட்டிவ் மற்றும் லேபர் கட்சிகளின் மீது மக்கள் விரக்தி அதிகரித்துள்ள நிலையில், தனது கட்சியை மாற்று சக்தியாக முன்னிறுத்தி வருகிறார்.
இந்த நன்கொடைகள், Reform UK கட்சிக்கு அரசியல் மேடையில் வலுவான நிதி ஆதரவை அளித்தாலும், சட்ட சிக்கல்கள் மற்றும் நேர்மை குறித்த கேள்விகள் கட்சியின் எதிர்காலத்தை சிக்கலாக்குகின்றன.
மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் சொகுசு பதுங்குகுழிகள் - 2035-க்குள் 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |