எலோன் மஸ்கின் குழந்தைக்கு தாயாக மறுத்த பிரபலம்... அவர் சொன்ன விளக்கம்
கிரிப்டோகரன்சி இன்ஃப்ளூயன்ஸரான Tiffany Fong என்பவர் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்கின் குழந்தைக்கு தாயாக மறுத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தாயாக வேண்டும்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியை சேர்ந்த டிஃப்பனி ஃபாங் என்பவருடன் கடந்த ஆண்டு முதல் தமது எக்ஸ் பக்கத்தின் ஊடாக எலோன் மஸ்க் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தமது குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் மஸ்க் வைத்துள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஃபாங், மிகவும் பாரம்பரியமான குடும்பத்தையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஃபாங் கர்ப்பிணியாக இருக்கிறார் என கசிந்துள்ள வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ள அவர், அது உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளார்.
லாஸ் வேகாஸில் 1994ல் பிறந்த ஃபாங், 2016ல் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் பட்டப்படிப்பை முடித்தார்.
முதலீடு
தன்னை ஒரு தயக்கமுள்ள கிரிப்டோ பத்திரிகையாளர் என்று கூறிக் கொள்ளும் ஃபாங், தமது ட்விட்டர் பயோவில், "நான் ஒரு உருளைக்கிழங்கு. சில நேரங்களில் நான் குற்றவாளிகளை நேர்காணல் செய்வேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் காலகட்டத்தில் Celsius Network நிறுவனத்தின் கிரிப்டோவில் 200,000 டொலர் முதலீடு செய்து மொத்த தொகையையும் இழந்தார். Celsius Network நிறுவனம் 2022ல் திவாலானதாக அறிவித்ததே காரணம். அப்போது ஃபாங் வெளியிட்ட காணொளி ஒன்று 85,000 பார்வையாளர்களைக் கடந்து பெரும் கவனத்தை ஈர்த்தது.
மட்டுமின்றி, 2022ல் FTX கிரிப்டோ நிறுவனம் கடும் பின்னடைவை சந்தித்ததன் பின்னணியையும் ஃபாங் அம்பலப்படுத்தினார். இந்த நிலையிலேயே தமது ஒரு பிள்ளைக்கு தாயாக வேண்டும் என்ற கோரிக்கையுடன் எலோன் மஸ்க் அவரை அணுகியுள்ளார்.
உலகில் மிகவும் புத்திசாலியான பிள்ளைகள் பலரைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்துடன் எலோன் மஸ்க் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |