ரூ.1.5 கோடியை நெருங்கிய Bitcoin விலை., இன்னும் அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை
உலகின் மிகப் பழமையான, மிகப்பாரிய மற்றும் மிகவும் பிரபலமான Cryptocurrencyயான Bitcoin முதலீட்டாளர்களுக்கு இந்த புத்தாண்டு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளது.
இன்று (ஜனவரி 02) Bitcoin விலை 45,000 US Dollarஐ தாண்டியது. ஏப்ரல் 2022க்குப் பிறகு முதன்முறையாக பிட்காயின் விலை இந்த அளவை எட்டியுள்ளது.
Exchange-traded spot bitcoin funds அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கையில் பிட்காயினின் விலை உயர்ந்துள்ளது.
பிட்காயினின் விலை கடந்த ஆண்டு அதாவது 2023-ல் 156 சதவீதம் அதிகரித்துள்ளது, இது 2020-க்குப் பிறகு அதன் சிறந்த செயல்திறன் ஆகும்.
இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தின் போது, Bitcoin விலை 45,532 டொலரை (இலங்கை பணமதிப்பில் ரூ. 1.47 கோடி) எட்டியது, இது கடந்த 21 மாதங்களில் மிக உயர்ந்த விளையாகும்.
இருப்பினும், அது இன்னும் அதன் பழைய உச்சத்தை நெருங்கவில்லை. ஏனெனில், கடந்த 2021 நவம்பரில், Bitcoin-ன் விலை அதிகபட்சமாக 69,000 டொலரை எட்டியது குறிப்பிடத்தக்கது.
Bitcoin விலை உயர்வுக்கு காரணம் என்ன?
அமெரிக்க பத்திர ஒழுங்குமுறை அமைப்பான Securities and Exchange Commission (SEC) ஒரு spot bitcoin ETF நிதிக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.
இது மில்லியன் கணக்கான முதலீட்டாளர்களுக்கு பிட்காயின் சந்தைக்கான வழியைத் திறந்து பில்லியன் டொலர் முதலீட்டைக் கொண்டு வர முடியும். இதுவே பிட்காயின் விலை உயர்வுக்குக் காரணம்.
ஏன் உயர்வு இருக்கும்?
இதற்கிடையில், Ethereum blockchain நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட நாணயமான Ether செவ்வாயன்று 1.45 சதவிகிதம் அதிகரித்து 2,386 டொலரை எட்டியது.
இந்த ஆண்டு கிரிப்டோ சந்தையில் அதிக வளர்ச்சி காண முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். Spot ETFகளில் இருந்து நிறைய நிதிகள் கிரிப்டோ சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிட்காயினை இரண்டாகப் பிரிக்கும் எதிர்பார்ப்பு மற்றும் அமெரிக்கா மற்றும் உலகின் பிற நாடுகளில் பணவியல் கொள்கையில் மாற்றங்கள் ஆகியவை பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளின் உயர்வுக்கு வழிவகுக்கும்.
ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் சுமார் 10 சதவிகித மக்கள் கிரிப்டோகரன்சியைக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Bitcoin Price Today, Ethereum blockchain, Ether, Spot bitcoin ETF, US Securities and Exchange Commission, Cryptocurrency, Bitcoin Cryptocurrency