இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த CSK அணி - என்ன தெரியுமா?
இன்ஸ்டாகிராமில் 17 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள முதல் ஐபிஎல் அணி என்ற சாதனையை CSK அணி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் அணிகளில் ஒன்றாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது.
சென்னை அணி, இதுவரை 10 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிகளில் நுழைந்து, அதில் 5 முறை வென்று கோப்பையை வென்றுள்ளது.
தோனி போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணியில் இருப்பதால், CSK அணிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ரசிகர்கள் உள்ளனர்.
17 மில்லியன் பின்தொடர்பவர்கள்
இந்நிலையில், CSK அணி இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் 17 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்று, 17 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள முதல் ஐபிஎல் என்ற சாதனையை படைத்துள்ளது.
அடுத்ததாக, RCB அணி 16.3 மில்லியன் பின்தொடர்பவர்களோடு 2வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 15.4மில்லியன் பின் தொடர்பவர்களுடன் 3வது இடத்தில் உள்ளது.
CSK அணியின் Facebook பக்கத்தை 14 மில்லியன் பேரும், X பக்கத்தை 10.8 மில்லியன் பேரும், Youtube சேனலை 3.98 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.
Made with every bit of your pride, passion and participation! 🫡💛
— Chennai Super Kings (@ChennaiIPL) March 13, 2025
WE ARE 1️⃣7️⃣M WHISTLES LOUD ON INSTAGRAM! 🥳
🔽 https://t.co/xoZU7KKwVY#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/bcjItZa15z
X தளத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள ஒரே அணி என்ற பெருமையை CSK அணி பெற்றுள்ளது.
தோனி, அணித்தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ள 18வது ஐபிஎல் தொடரில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் CSK அணி விளையாட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |