CSK-வில் அடுத்த ஆண்டு தக்க வைக்கப்படும் 4 வீரர்கள் இவர்கள் தானாம்! கசிந்த தகவல்: ரெய்னாவுக்கு சிக்கல்?
அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரி, சென்னை அணி தக்க வைத்து கொள்ள நான்கு வீரர்களைப் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என விளையாடுவதால், இந்த தொடருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இதுவரை 8 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் நிலையில், அடுத்த ஆண்டு 14-வது சீசனில் 10 அணிகள் , அதாவது கூடுதலாக இரண்டு அணிகள் வரவுள்ளதால், அடுத்த ஆண்டு ஐபிஎல் அணிகளுக்கான மெகா ஏலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் புதிய 2 அணிகளுக்கான ஏலத்தொகை மற்றும் இதர விவரங்கள் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஏலத்திற்கு முன்பு 2 இந்திய வீரர்கள், இரண்டு வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரர் என எந்த வகையிலும் வீரர்களை தக்க வைக்க அணி நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.
அந்த வகையில் தற்போது அடுத்த ஆண்டு ஏலத்தில் சிஎஸ்கே அணி எந்த 4 வீரர்களை தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.’ முக்கியமாக சென்னை அணி ரவீந்திர ஜடேஜா, டோனி, ருத்ராஜ் கெய்வாட் மற்றும் வெளிநாட்டு வீரராக சாம்கரன் ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்துள்ளதாம்.
இதில், மூத்த வீரர்கள் டூப்லெஸ்ஸிஸ், பிராவோ மற்றும் ரெய்னா ஆகியோர் பெயர் இடம்பெறவில்லை. ரெய்னாவுக்கும், சென்னை அணிக்கும் இடையே ஏற்பட்ட சிறிய மனக்கசப்பு பலரும் அறிந்தது, என்பதால், அவர் அடுத்த ஆண்டு சென்னை அணிக்கு விளையாடுவாரா? என்பது சந்தேகம் தான்.