ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கிய CSK: குஜராத் டைட்டன்ஸ் வெளியிட்ட உருக்கமான ட்வீட்
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய நிலையில், CSK ரசிகர்களின் மனதை உருக்கும் அளவிற்கான ட்வீட் ஒன்றை குஜராத் டைட்டன்ஸ் அணி பதிவிட்டுள்ளது.
கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது.
இந்த போட்டியின் முதல் பேட்டிங்களில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 214 ஓட்டங்கள் குவித்து அதிரடியான முதல் பாதியை நிறைவு செய்தனர்.
Happy Tears ?#CHAMPION5 #WhistlePodu #Yellove ?pic.twitter.com/jf05fszEDA
— Chennai Super Kings (@ChennaiIPL) May 30, 2023
இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கிற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கிய நிலையில் மழை குறுக்கிட்டு போட்டி தடைபட்டது.
இதனால் 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என ஆட்டம் குறைக்கப்பட்ட நிலையில், இலக்கை வெற்றிகரமாக அடைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
குஜராத் அணியின் உருக்கமான ட்வீட்
சென்னை அணியின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அதை போற்றும் விதமாக குஜராத் டைட்டன்ஸ் அணி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “தல” எங்களுக்கு தெரியும் நாங்கள் எதிர்த்து போராட போவது உங்களுடைய நுண்ணறிவு திறனுக்கு எதிராக மட்டும் அல்ல, நெடுங்கதையின் இறுதிப் போட்டியில் மஞ்சள் கடலுக்கு எதிராகவும் களமிறங்கினோம்.
?? https://t.co/TK66mFEsnN pic.twitter.com/iqiFrLREZ2
— Gujarat Titans (@gujarat_titans) May 29, 2023
இன்றைய இறுதி முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக இருந்தாலும், எங்களுக்குள் இருக்கும் குழந்தை நீங்கள் கோப்பையை வைத்து இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியடைகிறது என குஜராத் டைட்டன்ஸ் ட்வீட் செய்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இந்த ட்வீட் சென்னை ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.