உலகிலேயே முதல் முறையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது கியூபா!
உலகிலேயே முதல் முறையாக 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை கியூபா தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கியூபாவின் மத்திய மகாணமான சியன்பியூகோஸ் பகுதியிலே குழைந்தைகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் பணியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனை முடிவடைந்தையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் 2-வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு போடும் பணியை கியூபா தொடங்கியது.
சீனா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசூலா ஆகிய நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தாலும், கியூபாவில் முதன் முறையாக போடப்பட்டுள்ளது. இருப்பினும் கியூபாவில் போடப்பட்டுள்ள தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.