தடையை மீறி கியூபாவை அடைந்த ரஷ்ய எண்ணெய்: எந்த நாடும் உதவலாம் என பல்டி அடித்த ட்ரம்ப்
கியூபாவிற்கு அண்டை நாடுகள் எதுவும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தடை செய்திருந்த ட்ரம்ப், ரஷ்யா தனது எண்ணெய் கப்பலை அனுப்பியுள்ள நிலையில் பல்டி அடித்துள்ளார்.
கிட்டத்தட்ட முடங்கிப்போன
எந்த நாடும் கியூபாவிற்கு உதவுவதில் தமக்கு பிரச்சனை இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளால் தடை விதிக்கப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் ரஷ்யா கச்சா எண்ணெய் அனுப்பியுள்ளது.

குறித்த கப்பலானது ஞாயிற்றுக்கிழமையன்று கிழக்கு கியூபாவின் கடற்பகுதிக்கு அப்பால் காணப்பட்டதாகவும், திங்களன்று கியூபாவின் துறைமுகத்திற்கு வந்து சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவால் விதிக்கப்பட்ட எண்ணெய் தடையால் கிட்டத்தட்ட முடங்கிப்போன நாட்டின் பொருளாதாரத்திற்கு இது ஒரு உயிர்நாடியாகப் பார்க்கப்படுகிறது.
ஜனவரி 3 அன்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைப் பதவியிலிருந்து கவிழ்த்த பிறகு, கியூபாவிற்கான வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா முடக்கியது.
அத்துடன், கியூபாவிற்கு கச்சா எண்ணெயை அனுப்பும் வேறு எந்த நாட்டின் மீதும் கடுமையான வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார். இதனையடுத்து, வெனிசுலாவை அடுத்து கியூபாவிற்கு அதிகமாக எண்ணெய் ஏற்றுமதி செய்துவந்த மெக்சிகோவும் நிறுத்தியது.
இதனால் கடந்த மூன்று மாதங்களாக எண்ணெய் வரத்து இல்லாமல் கியூபா தத்தளித்தது. இதனால் தொடர்ச்சியான மின்வெட்டு, பெட்ரோலுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கபப்டும் நெருக்கடி ஏற்பட்டது என ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கானெல் தெரிவித்திருந்தார்.

அதில் பிரச்சனை இல்லை
இதனிடையே, மெக்சிகோ, ஈரானுக்கு அடுத்து கியூபா தனது அடுத்த இலக்கு என குறிப்பிட்டிருந்த ட்ரம்ப், தற்போது தடைகளை மீறி ரஷ்யா தனது எண்ணெய் கப்பலை அனுப்பியுள்ளதை அடுத்து, கியூபாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசாங்கம் விரைவில் தானாகவே வீழ்ச்சியடையும் என்று தாம் கணித்துள்ளதால், அந்த நாட்டிற்கு யார் தற்போது உதவ முன்வந்தாலும் அது பற்றி கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யா அல்லது எந்த நாடாக இருந்தாலும் தமக்கு அதில் பிரச்சனை இல்லை என்றும் பல்டி அடித்துள்ளார். மேலும், ஈரான் விவகாரம் முடிவுக்கு வந்ததும் கியூபா தொடர்பில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் Anatoly Kolodkin என்ற கப்பல் 650,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொண்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது 730,000 பீப்பாய் எண்ணெய் கப்பல் என்றும் கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |