பேருந்து நிழற்குடையில் வைத்து பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய சிறுவன்! வைரலாகும் வீடியோ
சீருடையில் இருக்கும் பள்ளி மாணவிக்கு சிறுவன் மஞ்சள் தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
பள்ளி மாணவிக்கு சிறுவன் தாலி கட்டும் வீடியோவுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
தமிழக மாவட்டம் கடலூரில் சீருடையில் இருக்கும் பள்ளி மாணவிக்கு சிறுவன் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. சிறு சிறு கிராமங்களுக்கு செல்வதவற்கான சிற்றுண்டி பேருந்து நிறுத்தமாக இது செயல்பட்டு வருகிறது.
இதன் நிழற்குடையில் வடகரிராஜபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவன் ஒருவன், வெங்காயத்தலமேடு எனும் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் மாணவிக்கு தாலி கட்டியுள்ளார்.
காலேஜ் மாணவிகள் பரவாயில்லை ஆனால் பள்ளி மாணவிகள் நிலை மோசம் ஆகிரது பெற்றோர்கள் மாணவிகளின் ஸ்கூல் பேக் & மொபைலை பெற்றோர்கள் கண்காணிக்கவும்??? pic.twitter.com/BUdtkbCGVq
— SP Chhandak (@CHHANDAK175) October 10, 2022
மஞ்சள் கயிறு தாலியை அவர் கட்டும்போது அவரது நண்பர்கள் அவரை உற்சாகமூட்டி வீடியோ எடுக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.