சீரகம் நல்லது தான்.. ஆனால் இந்த பக்கவிளைவு உண்டாம்! எச்சரிக்கை செய்தி
பெரும்பாலும் அனைவரின் வீட்டு சமையலறையிலும் காணப்படும் சீரகத்தில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட சீரகத்தில், ஃபைபர், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அடங்கியுள்ளது.
சீரகத்தின் நன்மைகள்
- செரிமானத்தை மேம்படுத்துவதுடன் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
- குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
- இரத்ததில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
- உடலின் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.
எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?
ஒரு ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால், தூக்கமின்மை பிரச்சினை சரியாகும்.
கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள், மோரில் சிறிது சீரகத் தூள் மற்றும் மிளகு சேர்த்து கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.
ஞாபக சக்தியை அதிகரிக்க, அரை டீஸ்பூன் சீரகத்தை மென்று தினமும் சாப்பிடுங்கள்.
செரிமானத்தை மேம்படுத்த இரவில் இரண்டு தேக்கரண்டி சீரகத்தை ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம், இதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்களும் வெளியேறிவிடும்.
சீரகத்துடன் சிறிது மிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை வறுத்த சீரகத்தூள், சிறிது இஞ்சி, பாறை உப்பு மற்றும் அரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கவும். வடிகட்டிய பின் அது குளிர்ந்து குடிக்கலாம் குடலில் உள்ள வாயு வெளியேறும்.
மேலும் படிக்க- மறந்தும் கூட இந்த நோயாளிகள் மாதுளையை சாப்பிட வேண்டாம்
பக்கவிளைவு
அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை உண்டாக்குமாம், அத்துடன் கருவை கலைக்கும் தன்மை கொண்டதால் கருவுற நினைக்கும் பெண்கள் அளவுடன் சாப்பிட வேண்டும்.
மிக முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சீரகத்தை குறைப்பது நல்லது, ஏனெனில் இது பால் சுரப்பை குறைத்துவிடும்.
மேலும் படிக்க- முருங்கைகாயை யாரெல்லாம் சாப்பிடலாம்?