உக்ரைன் தலைநகர் கீவில் அமுலுக்கு வந்த புதிய விதி! மேயர் முக்கிய அறிவிப்பு
உக்ரைன் தலைநகர் கீவில் ஊரடங்குச் சட்டம் நீட்டிக்கப்படுவதாக நகர மேயர் Vitali Klitschko அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 31வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் மார்ச் 26 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் மார்ச் 28 திங்கட்கிழமை காலை 7 மணி வரை கீவ் நகரில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என மேயர் Vitali Klitschko அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ஏவுகணை மழை பொழிந்த ரஷ்ய போர்க் கப்பல்! வெளியான வீடியோ ஆதாரம்
ஊரடங்கு அமுல்படுத்துவது குறித்து உக்ரேனிய ராணுவம் முடிவெடுத்ததாக குறிப்பிட்ட Klitschko, ஏன்? ஏதற்காக? என்பது குறித்து மேலதிக தகவல் ஏதும் வழங்கவில்லை.
ஊரடங்கின் போது சிறப்பு அனுமதிப் பெற்ற வாகனங்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்.
மேலும், தஞ்சமடையும் இடத்திற்கு செல்வதற்காக மட்டுமே நகர வாசிகள் வீடுகளை வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சில மணிநேரங்களுக்கு பிறகு கீவ் நகரில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன. எனினும், இயல்பான கட்டுப்பாடுகள் தலைநகரில் அமுல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.