உக்ரைன் மீது ஏவுகணை மழை பொழிந்த ரஷ்ய போர்க் கப்பல்! வெளியான வீடியோ ஆதாரம்
உக்ரைன் மீது ரஷ்ய போர்க் கப்பல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 31வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது.
அதேசமயம் உக்ரைனின் மரியுபோல், கெர்சன் நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, கடலில் இருந்து படி போர்க் கப்பலிருந்து உக்ரைன் நகரம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
உக்ரைனை தொடர்ந்து ஜப்பானை சீண்டும் ரஷ்யா!
குறித்த வீடியோவில் மாலை நேரத்தில் கடலில் நிலைநிறுத்தப்பட்ட ரஷ்யாவின் போர்க் கப்பலிருந்து உக்ரைனை நோக்கி Kalibar ஏவுகணைகள் சரமாரியாக ஏவப்படுகிறது.
குறித்த ஏவுகணைகள் உக்ரைனின் Zhytomyr நகரை குறிவைத்து ஏவப்பபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து 4 ஏவுகணைகள் போர்க் கப்பலிருந்து ஏவப்பட்டதை வீடியோ காட்டுகிறது.
Russian project 21631 "Buyan-M" small missile ship launch Kalibr cruise missiles on Ukrainian targets in Zhytomyr Oblast.#Russia #Ukraine pic.twitter.com/fKspMl6scw
— BlueSauron?️ (@Blue_Sauron) March 26, 2022
குறித்த ஏவுகணைகள் எங்கே தாக்கியது, அதன் விளைவாக ஏதேனும் சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது போன்ற தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.